News April 25, 2025
ராணுவ உடை கடைகளுக்கு கிடுக்குப்பிடி

பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவினோம்.. PAK ஒப்புதல்

பயங்கரவாத இயக்கங்களுக்கும் PAK-க்கும் உள்ள தொடர்பை, அதன் பாதுகாப்பு அமைச்சரே போட்டு உடைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் PAK-க்கு பங்கிருக்கிறது என IND குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், PAK கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது என அமைச்சர் கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார். USA, மேற்குலக நாடுகளுக்காகவே PAK இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.
News April 25, 2025
துணை ராணுவப் படையினர் விடுமுறை ரத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்தியா-பாக் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதை கருத்தில் வைத்து துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவு அனுப்பியுள்ளனர். அதில் உடனே பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர்.
News April 25, 2025
காஷ்மீர் குறித்த கூகிள் Search.. கண்டுக்காத பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலை அடுத்து, கூகிளில் காஷ்மீர் பற்றிய தேடல்கள்தான் கடந்த 3 நாள்களில் அதிகரித்துள்ளது. Google search density அடிப்படையில், இந்தியா 100%, UAE 88%, பூடான் 76% ஆகியவை அதிகமாக தேடியுள்ளன. சம்மந்தப்பட்ட பாகிஸ்தானில் வெறும் 27% தான் காஷ்மீர் குறித்து தேடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நாடுகளான சீனா (13%), அமெரிக்கா (11%), ரஷ்யா (3%) போன்ற நாடுகளில் காஷ்மீர் குறித்து பெரிய தாக்கம் இல்லை!