News May 14, 2024
57 வயதில் குத்துச் சண்டைக்கு மீண்டும் வரும் மைக் டைசன்

அமெரிக்காவை சேர்ந்த சர்ச்சைக்குரிய குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 2005இல் ஓய்வு பெற்றார். தற்போது அவருக்கு 57 வயதாகும் நிலையில், மீண்டும் குத்துச்சண்டையில் களமிறங்கவுள்ளார். டெக்சாஸில் வரும் ஜுலை 20ஆம் தேதி ஜேக் பால் என்ற பிரபல யூடியுபருடன் மோதவுள்ளார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகி வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த டைசன், தனது உடல் தற்போதும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
Similar News
News March 26, 2026
திமுக கூட்டணியில் சிரித்து கொண்டே அழுகிறோம்: மதிமுக

தனிச்சின்னத்தில் போட்டியிட முடியவில்லையே என சிரித்துக்கொண்டே அழுவதாக மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த அவர், மதிமுகவின் தகுதிக்கு தகுந்தாற்போல தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார். மேலும், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து மாலைக்குள் தெரிந்துவிடும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
கமலை தோற்கடித்தது சரி: வானதி

கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை கமல்ஹாசன் அம்போ என விட்டுவிட்டதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கமலின் முடிவு குறித்து பேசிய அவர், தனக்கு மட்டும் MP சீட் வாங்கிக்கொண்டு அவர் சுயநலமாக செயல்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், 2021-ல் கோவை தெற்கு தொகுதி மக்கள் அவரை தோற்கடித்தது தற்போது சரியென நிரூபணம் ஆகியுள்ளதாகவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா BGT டெஸ்ட்!

IND- AUS மோதும் 5 போட்டிகள் கொண்ட BGT 2027-ம் ஆண்டுக்கான டெஸ்ட் தொடர் அட்டவணை வெளிவந்துள்ளது *முதல் டெஸ்ட்: ஜன.21- 25, நாக்பூர் *2-வது டெஸ்ட்: ஜன.29- பிப்.2, சென்னை *3-வது டெஸ்ட்: பிப்.11- பிப்.15, கவுகாத்தி *4-வது டெஸ்ட்: பிப்.19- பிப்.23, ராஞ்சி *5-வது டெஸ்ட்: பிப்.27- மார்ச் 3, அகமதாபாத். 2025-ல் ஆஸி.,யில் நடைபெற்ற தொடரை 1-3 என இழந்த நிலையில், அதற்கு சொந்த மண்ணில் இந்தியா பழிதீர்க்குமா?


