News May 16, 2024
சீன ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் பரிந்துரை

சீன இறக்குமதி மீதான வரியை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளதால், இருநாட்டு நட்புறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், சீனாவை தளமாகக் கொண்ட தனது பல நூறு ஊழியர்களை அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் மாற பரிசீலிக்குமாறு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது சர்வதேச வர்த்தக மேலாண்மை நடைமுறையின் ஒருபகுதியே என்றும் மைக்ரோசாஃப்ட் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News September 11, 2025
அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்த சீமான்

ஏற்கனவே மரம், ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ள சீமான், அடுத்தடுத்த மாநாடுகளை அறிவித்துள்ளார். தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போவதாகவும், ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள் குறித்து உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News September 11, 2025
ஸ்டாலின் குடும்பத்தால் வதைபடும் தமிழ்நாடு: EPS

பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திமுக ஊழல் செய்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கவர்ச்சியான அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி, திமுக ஆட்சியை பிடித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஸ்டாலின், சபரீசன், உதயநிதி, துர்கா ஸ்டாலின் என மொத்தம் 4 முதல்வர்கள் திமுக ஆட்சியில் உள்ளதாகவும், இந்த அதிகார மையங்களே தமிழ்நாட்டை வாட்டி வதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News September 11, 2025
ASIA CUP: வங்கதேசத்திற்கு 144 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹாங்காங் வீரர்கள் ஒருநாள் போட்டியை போல நிதானமாகவே விளையாடினர். இதனால் ரன்கள் ஆமைவேகத்திலேயே ஏற, அதிகபட்சமாக நிஷகத் கான் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் யாஷிம் முர்டசா அதிரடியாக 28 ரன்கள் அடித்து அணியை சற்று மீட்டெடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் 143/7 ரன்களை எடுத்துள்ளது.