News April 7, 2025
முழு பலத்துடன் களம் இறங்கும் MI

RCBக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், MI அணி தனது முழு பலத்துடன் களம் இறங்கியுள்ளது. காயம் காரணமாக, முதல் போட்டியில் இருந்து பவுலர் பும்ரா விளையாடவில்லை. மேலும், முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக கடந்த போட்டியில் ஓய்வில் இருந்தார். தற்போது, நலம் பெற்றிருக்கும் இருவரும் இன்றைய போட்டியில் களம் இறங்கியுள்ளனர். வெற்றி பெறுமா MI?
Similar News
News November 15, 2025
20-ம் தேதி வரை மழை வெளுக்கும்

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழத்தில் வரும் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த 3 நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
News November 15, 2025
ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் SC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ED இயக்குநர் முன் கடந்த 12 மாதங்களில் 116 முறை நேரில் ஆஜரானதாகவும், அதனை கருத்தில் கொண்டு ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ED பதில் அளிக்க SC உத்தரவிட்டுள்ளது.
News November 15, 2025
ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?

‘ரஜினி 174’ படத்தில் இருந்து <<18275475>>சுந்தர் சி<<>> வெளியேறியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஒரு ஜாலியான பேய் கதையை சுந்தர் சி கூறியுள்ளாராம். கதை பிடித்துபோன ரஜினி, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி கூறியிருக்கிறாராம். மாற்றங்களை செய்தாலும், அடிக்கடி கரெக்ஷன் சொன்னதால் கடுப்பான சுந்தர் சி, யாரிடமும் சொல்லாமல், படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டாராம்.


