News March 28, 2024
MI Vs SRH: பல சாதனை படைத்த ஆட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரின் MI – SRH அணிகள் இடையிலான 8ஆவது லீக் போட்டியானது பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் சாதனை பட்டியலில் முதலிடம் (523 ரன்கள்). 2.அதிக சிக்சர்கள் (38 சிக்சர்கள்) அடிக்கப்பட்ட ஆட்டங்களில் முதலிடம் . 3. அதிக பவுண்டரிகள் (69 பவுண்டரிகள்) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் முதலிடம்.
Similar News
News December 5, 2025
25 ஆண்டுகால மோடி, புடின் நட்பு (RARE IMAGE)

PM மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அரசியலையும் கடந்து மிக நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நட்பு இன்று நேற்று அல்ல 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய இந்திய PM வாஜ்பாய் புடினை சந்தித்தார். அவருடன் குஜராத் CM-மாக இருந்த மோடியும் சென்றிருந்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
News December 5, 2025
வைகோவின் முடிவால் திமுகவுக்கு நெருக்கடியா?

2021 தேர்தலில் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. எனவே இம்முறை தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் வைகோ முடிவுசெய்துள்ளாராம். இதற்காக, ஏற்கெனவே வென்ற 4 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்., விசிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தங்களுக்கும் ஒதுக்கவேண்டும் என மதிமுக திமுகவிடம் முறையிடுவதாக பேசப்படுகிறது.
News December 5, 2025
மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.


