News May 7, 2025
அதிரடி காட்டிய MI ஓப்பனர்ஸ்… ரோஹித் அரைசதம்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். ரிக்கல்டன் 29 பந்துகளிலும், ரோஹித் சர்மா 31 பந்துகளிலும் அரைசதம் அடித்து எதிர் அணிக்கு தலைவலியை கொடுத்தனர். இதனால் மும்பை அணி ரன் மளமளவென ஏறியது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
Similar News
News December 7, 2025
இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.
News December 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
News December 7, 2025
ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


