News April 27, 2025
ராக்கெட் போல மேலே வந்த MI

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த MI அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த இந்த அணி, 5 தொடர் வெற்றிகள் மூலம் ராக்கெட் வேகத்தில் மேலே வந்துள்ளது. MI அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
Similar News
News April 28, 2025
சம்மரில் சர்க்கரை நோயாளிகள் இதை குடிக்கலாம்!

சம்மரில் வெப்பத்தை குறைக்கவும், ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கவும் சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் பானங்களை பருகலாம். மசாலா மோர் செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பொட்டாசியம், எலக்ட்ரோலைட்களின் சிறந்த மூலமான தேங்காய் நீரை பருகலாம். நெல்லிக்காய் சாரில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் – புதினா டிடாக்ஸ் நீரையும் பருகலாம்.
News April 28, 2025
மோசமான ஃபார்ம் குறித்து பண்ட் விளக்கம்

நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான ஃபார்ம் குறித்த கேள்விக்கு, இது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என LSG கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு சீசனில், நமக்கு சாதகமாக நடக்காதபோது, ஒரு வீரராக நம் மீது கேள்வி எழுவது உண்மைதான், ஆனால் அதை பற்றி மட்டும் தீவிரமாக யோசிக்க கூடாது எனவும், இது ஒரு டீம் விளையாட்டு என்பதால், தனி வீரர்களை மட்டுமே எப்போதும் நம்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News April 28, 2025
டிரெஸ்ஸை கழட்டிட்டு உட்கார சொன்னாரு: நடிகை பகீர்

நடிகை நவீனா போலே பாலிவுட் இயக்குநர் சஜித் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004-ம் ஆண்டில் நடந்த முதல் சந்திப்பிலேயே டிரெஸ்ஸை கழட்டிவிட்டு தன் முன் உட்கார சொன்னதாகவும், டிரெஸ் இல்லாமல் தனது உடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புவதாக சஜித் கூறியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். உடனே அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.