News October 6, 2025
சிலையை சேதப்படுத்தி MGR புகழை அழிக்க முடியாது:EPS

மதுரை அவனியாபுரத்தில் MGR சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுவதாகவும் கூறியுள்ளார். அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 6, 2025
BREAKING: மீண்டும் அமைச்சர் ஆகிறாரா செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு SC இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக்கூடாது என்று நாங்கள் (SC ) சொல்லவில்லை. அமைச்சராக விரும்பினால், உரிய மனுவை SC-யில் தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம்; விதிமுறைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளது.
News October 6, 2025
CJI பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி ஏன்?

கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவ கோரிய மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது CJI பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து <<17750475>>சர்ச்சையானது<<>>. இதையடுத்து ‘நான் எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறேன்’ என அவர் விளக்கம் அளித்தார். இன்று CJI பி.ஆர்.கவாய் மீதான <<17928342>>தாக்குதல் <<>>முயற்சிக்கு இது காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது.
News October 6, 2025
சற்றுமுன்: கனமழை பொளந்து கட்டும்

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. இன்று நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.