News January 30, 2026

MGR போல விஜய் களத்தில் செயல்படவில்லை: செல்லூர்

image

விஜய் அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யை நாங்கள் திட்டவில்லை, ஆனால் அவர் எங்களை திட்டினால் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவதெல்லாம் புதிதாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். MGR போல விஜய் களத்தில் இறங்கி அரசியல் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 605 ▶குறள்: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ▶பொருள்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

News February 8, 2026

தடுப்பூசி ஊசி போட பெற்றோரின் அனுமதி கட்டாயம்

image

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்க பெற்றோரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
பெற்றோரின் அனுமதி பெற்ற பின்னரே மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News February 8, 2026

திமுகவை பழிதீர்க்க போவது உறுதி; அன்புமணி

image

பயனற்ற ஓய்வூதிய திட்டம் பயன்பாட்டுக்கு வராத நிலையில், பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர்களை திமுக ஏமாற்ற முடியாது என்று அன்புமணி விமர்சித்துள்ளார். ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போர்வையில் CM-க்கு நன்றி அறிவிப்பு மாநாடு எனும் பெயரில் திமுகவே ஓர் நாடகத்தை இன்று அரங்கேற உள்ளது. இதுபோல் எத்தனை பாராட்டு விழாக்களை நடத்தினாலும் வரும் தேர்தலில் திமுகவை அரசு ஊழியர்கள் பழிதீர்க்க போவது உறுதி என்றார்.

error: Content is protected !!