News December 24, 2025
MGR நினைவிடத்தில் EPS எடுத்த சபதம்

MGR-ன் 38-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் EPS தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அதிமுக ஆட்சி மீண்டும் மலர உழைப்போம் என அனைவரும் சபதம் எடுத்துக்கொண்டனர். ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளை உருவாக்கி சென்றவர் MGR என புகழ்ந்த EPS, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட MGR-ன் வழியை பின்பற்றுவோம் என்று உறுதியேற்றார்.
Similar News
News December 26, 2025
சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் தங்கம்!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்றும் மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சர்வதேச சந்தையில் இன்று (டிச.26) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $20.09 அதிகரித்து $4,499.62 ஆக உள்ளது. வெள்ளியும் 1 அவுன்ஸ்-க்கு $1.10 உயர்ந்து $73.01-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை (தற்போது ₹1,02,560) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News December 26, 2025
காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க.. அவ்வளோ நல்லது

ஃபோலிக் ஆசிட் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஓமம் தேநீர் மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் செரிமானம் மேம்படவும் இது உதவுமாம். ➤நீரில் கிரீன் டீயை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும் ➤அதில், ஓமத்தை சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள் ➤அந்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால், சத்தான ஓமம் தேநீர் ரெடி. SHARE IT.
News December 26, 2025
FLASH: தவெகவில் விஜய் எடுத்த புதிய முடிவு

தவெகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது விஜய்க்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. இந்நிலையில், மா.செ.,க்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா.செ.,க்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மா.பொ.,க்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமாம். இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக மா.பொ.,க்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


