News February 21, 2026
MGR உருண்டு உருண்டு அழுதிருப்பார்: உதயநிதி

மோடிக்கு ஏற்ற முரட்டு அடிமையாக EPS மாறிவிட்டார் என்று DCM உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு MGR-ன் படம் பார்த்த EPS கண்கலங்கிய காட்சிகள் வைரலானது. இதனைக் குறிப்பிட்ட உதயநிதி, இன்று MGR உயிருடன் இருந்திருந்தால் EPS-ஐ பார்த்து உருண்டு உருண்டு அழுதிருப்பார் என கூறினார். நான் தொடங்கிய கட்சியை இப்படி செய்துவிட்டாயே என்று MGR வேதனைப்பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.
Similar News
News February 21, 2026
MH முதல்வரின் மனைவி பதவி விலகினார்!

மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்சிஸ் வங்கியில் இளம் நிர்வாக பயிற்சியாளராக இணைந்தேன். தற்போது சீனியர் துணைத் தலைவராக முழுமனதுடன் விலகுகிறேன் என அம்ருதா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த திடீர் முடிவு ஏன், அரசியலில் கால் பதிக்க உள்ளீர்களா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News February 21, 2026
காரைக்குடியில் போட்டியா? சீமான் போடும் பிளான்

காரைக்குடியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 தேர்தலில் நாதக டெபாசிட் பெற்ற ஒரே தொகுதி இதுதான். அதேபோல், 2021 தேர்தலிலும் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நாதக 14.80% வாக்குகளை பெற்றது. தனது சொந்த தொகுதியான இங்கு களமிறங்கினால், குடும்பத்தாரை வைத்து உள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு, தமிழகம் முழுவதும் தான் சுற்றுப்பயணம் செல்லலாம் என சீமான் திட்டமிட்டுள்ளாராம்.
News February 21, 2026
வெள்ளி கிலோவுக்கு ₹20,000 உயர்ந்தது

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 உயர்ந்து ₹290-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 அதிகரித்து ₹2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம் விலை சவரனுக்கு ₹2,080 உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


