News March 28, 2024
மேற்கூரை சரிந்ததற்கு மெட்ரோ பணிகள் காரணம்?

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூரை சரிந்ததற்கு, கேளிக்கை விடுதி அருகே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளே காரணமென கூறப்படுகிறது. நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட அதிர்வை தாங்க முடியாமல் கட்டடம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 28, 2025
தமிழகத்தில் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சீமான்

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நாதக ஏற்காது என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புலம் பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்யட்டும், ஆனால் அவர்களது மாநிலத்திற்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாதகவை அழைக்க மாட்டார்கள் என கூறிய அவர், சென்றாலும் எந்த பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
News October 28, 2025
கால் ஆட்டுவதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

உட்கார்ந்திருக்கும்போது கால்களை ஆட்டிக்கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? இதற்கு அசௌகரியம், பதற்றம் ஆகியவை ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறதாம். அதாவது முக்கியமான வேலைகளை செய்யும்போது உங்களை அலர்ட்டாக வைத்திருப்பதற்காகவே மூளை இதனை செய்வதாக மனநல நிபுணர்கள் சொல்றாங்க. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க. உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கான்னு கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
பிஹாரில் கள்ளுக்கு அனுமதி: தேஜஸ்வி

பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு சட்டத்தில் கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல், SC, ST வன்கொடுமை சட்டம் போன்றே BC-க்கும் தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி அளித்திருந்தார்.


