News October 9, 2025
வானில் விண்கல் மழை PHOTOS

டிராகோனிட் விண்கல் மழை என்பது ஒரு வால் நட்சத்திரம் தன்னுடைய துகள்களை பூமியின் வளிமண்டலத்தில் வீசும் போது ஏற்படுகிறது. அந்த துகள்கள் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, தீப்பொறிகளைப் போல் எரிந்து ‘ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ என அழைக்கப்படும் ஒளிக்கற்றைகளை உருவாக்குகின்றன. இது (அக். 8) நேற்று ஆசியாவின் சில பகுதிகளில் பிரகாசமாக தெரிந்தது. இந்த அழகான நிகழ்வின் போட்டோஸை மேலே பகிர்ந்துள்ளோம்.
Similar News
News October 9, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் நிலை என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் இன்னும் 2 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி உறுதி அளித்துள்ளார். டிசம்பரில் புதிய பயனர்களுக்கு ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், விண்ணப்பதாரர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.
News October 9, 2025
பிரிட்டனிடம் ₹4,156 கோடிக்கு ஆயுதம் வாங்கும் இந்தியா

UK பிரதமர் கியர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையே வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக ₹4,156 கோடிக்கு இலகுரக ஏவுகணைகளை இந்தியா இறக்குமதி செய்யும். இதனால் அயர்லாந்தில் உள்ள ஏவுகணை தொழிற்சாலையில் 700 பேருக்கு வேலை உறுதியாகுமாம். இந்நிலையில், மேக்-இன் இந்தியா என்று சொல்லிவிட்டு இலகு ரக ஆயுதங்களை கூட பிரிட்டனிடம் வாங்குவது ஏன் என SM-ல் பலர் கமெண்ட் செய்கின்றனர்.
News October 9, 2025
சுதந்திரமாக கொலை செய்கிறார்கள்: EPS

தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக கொலை செய்து வருவதாக EPS சாடியுள்ளார். போலீஸை கண்டு குற்றவாளிகளுக்கு பயமில்லை எனவும், நெல்லை காங்., மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தற்போதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேபோல், தலைவர்களின் பிறந்தநாள் கூட்டத்திற்கு கூட அரசு அனுமதி அளிப்பதில்லை, கோர்ட் சென்றே அனுமதி பெற வேண்டியிருப்பதாக EPS தெரிவித்தார்.