News October 28, 2025
தங்கம், வெள்ளியை விட காஸ்ட்லியான உலோகங்கள்

தங்கம் வெள்ளியின் விலை இன்று குறைந்திருக்கிறது. இருந்தாலும், அதன் விலை இனி வரும்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் சொல்கின்றனர். தங்கம், வெள்ளியை விட விலை உயர்ந்த உலோகங்கள் சில இருக்கின்றன. இவை தொழிற்சாலை தேவைகளுக்காக பயன்படுகின்றன. அந்த விலை உயர்ந்த உலோகங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
அமேசானில் இருந்து 30,000 ஊழியர்களை நீக்க முடிவு

அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்ரேட் ஊழியர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-க்கு பிறகு(27,000 பேர்) நடக்கும் மிகப்பெரிய வேலை நீக்கமாக இது பார்க்கப்படுகிறது. அமேசான் மொத்தமாக 15% வேலையாள்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. AI வளர்ச்சியின் காரணமாக பலர் வேலையிழப்பார்கள் என முன்னரே அந்நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 28, 2025
ஓய்வு பெறும் ரோஹித்.. பயிற்சியாளர் பரபரப்பு Statement!

நிச்சயமாக ரோஹித் 2027 உலக கோப்பைக்கு பிறகுதான் ஓய்வு பெறுவார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்ற ரோஹித், தனது டார்கெட் 2027 உலககோப்பைதான் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க BCCI முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
News October 28, 2025
யாரும் ADMK – BJP கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை: CM

2026 தேர்தல் என்பது அதிமுக – பாஜக கூட்டணியிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் தேர்தலாகவே இருக்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். <<18126503>>வாக்குச்சாவடி பயிற்சிக் <<>>கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே உள்ளதாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் செல்ல விரும்பவில்லை என்றும், மக்களுக்கும் அவர்கள் மீது விருப்பமில்லை எனவும் சாடியுள்ளார்.


