News May 2, 2024
மெட் காலா பார்வையாளர் டிக்கெட் ரூ.40 லட்சம்!

நியூயார்க்கின் ஆடம்பர விழாவாகக் கருதப்படும் மெட் காலா 2024, மே 6ஆம் தேதி தொடங்குகிறது. ஃபேஷன் அடையாளமாகக் கருதப்படும் விஐபிக்கள் இதில் கெளரவிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு இந்தியாவின் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா பங்கேற்றனர். இதில் பார்வையாளர் டிக்கெட் ஒன்று 50,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சத்துக்கு விற்றுள்ளது. அதே போன்று முழு பார்வையாளர் டேபிளுக்கு ரூ.2 கோடி செலுத்த வேண்டும்.
Similar News
News January 30, 2026
கடைசி நிமிட அழைப்பால் பறிபோன கேப்டன் உயிர்!

அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில் பலியான 5 பேரில் கேப்டன் சுமித் கபூரும் ஒருவர். இந்நிலையில் அவர் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை இயக்க வேண்டியவரே அல்ல என்பது தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட மற்றொரு விமானிக்கு பதிலாக தான் சுமித் அதில் சென்றதாகவும், விமானத்தை இயக்க கடைசி சில மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே உத்தரவுகள் வந்ததாகவும் அவரது நண்பர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
News January 30, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 30, 2026
இந்து விரோத திமுகவை மக்கள் தூக்கியெறிய வேண்டும்: H ராஜா

இந்து கோவில் சம்பந்தப்பட்ட விசயத்தில் திமுக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என H.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஹைகோர்ட் கொடுத்த தீர்ப்பை நிறைவேற்றவில்லை என்றும், தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு எதிராக தங்களது கூலி ஆட்களை வைத்து போராட்டம் நடத்தினர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் இந்து விரோத திமுக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும் எனவும் பேசியுள்ளார்.


