News September 24, 2025
இந்திய வரும் மெஸ்ஸி… ஆஸி., அணியுடன் மோதுகிறார்

நவம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஆஸ்திரேலியாவுடன் நட்புறவு போட்டியில் மோதுகிறது. மெஸ்ஸியின் வருகை ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிகாரிகள் அடுத்த வாரம் கொச்சி மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் விளையாடவுள்ள மெஸ்ஸியை வரவேற்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு உள்ளனர். Vamos Messi..
Similar News
News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.
News September 24, 2025
USA கிரிக்கெட் சங்கத்தை இடைநீக்கம் செய்தது ICC

அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசியின் சட்ட திட்டங்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முறையான நிர்வாகம் அமைக்கவில்லை, ஒலிம்பிக் அங்கீகாரம் பெறவில்லை, விதிகளை மீறிய செயல்பாடுகள் உள்ளிட்டவையை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஐசிசி போட்டிகளில் அமெரிக்காவால் பங்கேற்க முடியாது.
News September 24, 2025
மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.