News March 29, 2025
ஜோகோவிச் ஆட்டத்தை கண்டு ரசித்த மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன், டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இந்த ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த மெஸ்ஸி, போட்டிக்கு பின் ஜோகோவிச்சுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது இருவரும் தங்கள் ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர்.
Similar News
News January 16, 2026
செந்தில் பாலாஜிக்கு அடுத்த அதிர்ச்சி

செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தீவிரப்படுத்தக்கோரி, SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். எனவே, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரை முதலில் விசாரித்து முடிக்க வேண்டும் என மனுதாரர் Y.பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
News January 16, 2026
திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும்: EPS

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் மூலம் திமுகவுக்கு காங்., கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., கை நழுவி வெளியே போகப் போகிறது என்றும், இதனால், இண்டியா கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
News January 16, 2026
BREAKING: இன்று கிடையாது.. தமிழக அரசு அறிவித்தது

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், அனைத்து மதுபானக் கடைகளில் சில்லறை விற்பனை, அதனுடன் இணைந்த பார்களில் விற்பனை நடைபெறாது. அதனை மீறி விற்பனை நடந்தாலோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


