News November 18, 2024

இபிஎஸ்-க்கு விஜய் அனுப்பிய மெசேஜ்..!

image

திமுகவை எதிர்த்ததால் உற்சாகமடைந்த அதிமுக, இனி விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என ர.ர.க்களுக்கு உத்தரவும் போட்டது. இதனால் இபிஎஸ் – விஜய் கூட்டணி உருவாகும் என பேசப்பட்ட நிலையில், பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே லட்சியம் என தவெக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் “அதிமுகவுடன் ஒட்ட வந்தவர்கள் அல்ல.. ரீபிளேஸ் செய்ய வந்தவர்கள் நாங்கள்” என்ற மெசேஜைதான் இபிஎஸ்க்கு விஜய் அனுப்பியுள்ளார்.

Similar News

News March 17, 2026

ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்: ரஜினிகாந்த்

image

ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் தன்னை <<19363014>>பற்றி கூறிய கருத்து<<>> உண்மைக்கு மாறானது என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பற்றிய அவதூறு கருத்தை கண்டித்த EPS, நயினார், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் இருந்து நீக்க விஜய்க்கு பலரும் அறிவுறுத்தியிருந்தார்.

News March 17, 2026

போர் குறித்து வதந்தி பரப்பிய 19 இந்தியர்கள் கைது

image

ஈரான்-இஸ்ரேல் போர் தொடர்பாக வதந்திகளை பரப்பியதாக UAE-வில் 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து போலியான வீடியோக்கள், AI மூலம் எடிட் செய்யப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்திய மதிப்பில் ₹23 லட்சம் அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

News March 17, 2026

யாருக்கும் பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: தமிழிசை

image

CBI மூலம் NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு, தாங்கள் கூட்டணிக்காக யாருக்கும் அழுத்தமோ நெருக்கடியோ கொடுக்கவில்லை என தமிழிசை கூறியுள்ளார். தற்போதுள்ள தங்களின் கூட்டணி பலமாக உள்ளது என்ற அவர், வேறு யாரும் கூட்டணிக்கு வருவார்களா என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!