News March 14, 2025

இணையும் புதன் – சுக்கிரன்: மிரட்ட போகும் 3 ராசிகள்!

image

மார்ச் 13ஆம் தேதி புதனும், சுக்கிரனும் மீன ராசியில் இணைந்துள்ளனர். அதே நாளில், சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த இரு விசேஷ நிகழ்வுகளால் மேஷம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி உண்டாகும். கவலைகளை சிதறடிப்பீர்கள். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் மேம்படும். காதல் திருமணம் கைக்கூடும்.

Similar News

News March 15, 2025

போக்சோ வழக்கு: Ex CM-க்கு எதிரான சம்மன் நிறுத்திவைப்பு!

image

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகா Ex CM எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 15ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பா உட்பட 4 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் எடியூரப்பா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், 4 பேரும் ஆஜராகும் சம்மனை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News March 15, 2025

தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்ய வேண்டாம்: பவன்

image

தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். தமிழ் படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலங்களின் காசு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களின் மொழி வேண்டாமா எனவும் அவர் வினவியுள்ளார். ஒரு மொழிக்கு எதிராக ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும், சமஸ்கிருதமும், ஹிந்தியும் நமது தேசத்தின் மொழிகள் அல்லவா எனவும் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

‘ராட்சசன்’ இயக்குநர் அடுத்த படம் நாளை அறிவிப்பு

image

இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து ராம்குமார் புதிய படம் இயக்குவதாக இருந்தது. இதற்காக 2 ஆண்டுகள் அவர் காத்திருந்த நிலையில், தனுஷ் திடீரென நடிக்க மறுத்தார். அதையடுத்து SK, விஷ்னு விஷாலிடம் அந்த கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

error: Content is protected !!