News March 25, 2025
புறப்பட்ட புதன்: கெத்து காட்ட போகும் 3 ராசிகள்!

புதன் பகவான் வரும் 29ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிகளுக்கு ராஜ யோகம் அடிக்கப் போகிறது. 1) விருச்சிகம்: புதிய சொத்து வாங்குவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். 2) கும்பம்: நிதி நிலைமை மேம்படும். தொட்ட காரியம் வெற்றியில் முடியும். புதிய முதலீடு லாபம் கொடுக்கும். 3) மிதுனம்: புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
Similar News
News November 20, 2025
வரலாறு படைக்கும் பிஹார் CM நிதிஷ்குமார்

NDA கூட்டணியால் பிஹார் CM-மாக தேர்வாகியுள்ள நிதிஷ்குமார், இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். இதன்மூலம் 2005 முதல் (2014 மே – 2015 பிப்., தவிர) இன்று வரை பிஹார் CM-ஆக நிதிஷ் தொடர்கிறார். 35 ஆண்டுகளாக போட்டியிடாமலேயே CM பதவியில் தொடர்ந்த இவர், மீண்டும் 10-வது முறையாக பொறுப்பேற்று சாதனை படைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில், PM மோடி மற்றும் பாஜக ஆளும் மாநில CM-கள் பங்கேற்க உள்ளனர்.
News November 20, 2025
10th பாஸ் போதும்.. ₹18,000 உடன் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 20, 2025
தேர்தல் நெருங்கும்போது பெண்களுக்கு ₹10,000: KC

பிஹாரை போன்று தமிழகத்திலும் திமுக அரசு, தேர்தல் நெருக்கத்தில் பெண்களுக்கு ₹10,000 வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிஹாரில் வாக்கு திருட்டு நடந்ததற்கான தரவுகள் தன்னிடம் இல்லை; அதன் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026 தேர்தலில், விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


