News March 15, 2025

ஆண்களே, ரிலாக்ஸ் பிளீஸ்…

image

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடமே உள்ளது. இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணு தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆண்களே டென்ஷன் ஆகாதீங்க. ரிலாக்ஸ் பிளீஸ்!

Similar News

News March 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

News March 16, 2025

365 நாட்களுக்கு BSNL அசத்தல் ரீசார்ஜ் ப்ளான்!

image

குறைந்த செலவில் தங்கள் சிம்மை நீண்ட காலத்திற்கு ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு BSNL ஒரு அசத்தல் திட்டத்தை வழங்கியுள்ளது. ₹1,198க்கு ரீசார்ஜ் செய்தால் (ஒரு நாளைக்கு ₹3.28) 365 நாட்கள் செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் வரை இலவசமாக பேசலாம், 30 இலவச SMS, மாதத்திற்கு 3GB டேட்டா பெறலாம். 2வது சிம்மாக BSNL பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த ப்ளானாகும்.

News March 16, 2025

APPLY NOW: இன்றே கடைசி நாள்

image

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசி நாளாகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. <>https://exams.nta.ac.in/NCET/<<>>என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!