News August 7, 2025

ஆண்களே இந்த பேப்பரை இனி கையில் தொடாதீர்கள்!

image

ஷாப்பிங் மால், ATM என எங்கு சென்றாலும், பில் போட்டால், கையில் ஒரு சிறிய பேப்பர் தருவாங்க. இந்த குட்டி பேப்பர் ஆண்களுக்கு பெரிய டேஞ்சர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த Thermal paper-ல் BPA (Bisphenol A) என்ற மிகவும் ஆபத்தான கெமிக்கல் உள்ளது. இது ஹார்மோன்களை சீர்குலைத்து பல உடல்நல பிரச்னைகளை உண்டாக்குமாம். இதனால் விந்தணு பாதிப்பும் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனி கொஞ்சம் கவனமா இருங்க!

Similar News

News August 7, 2025

டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

image

இந்தியா – ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அலுமினியம், ரயில்வே, சுரங்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதன்மூலம், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது.

News August 7, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 7 – ஆடி 22 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை.

News August 7, 2025

யாருக்காகவும் கிரிக்கெட் நிற்காது: கங்குலி

image

டெஸ்ட், டி20 -களில் ஓய்வு அறிவித்த வீரர்கள் ODI-ல் விளையாடுவார்களா என்பது குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் யாருக்காகவும் நிற்காது எனவும், கவாஸ்கர் சென்ற பிறகு சச்சின் வந்தார், டிராவிட், சேவாக், லக்‌ஷ்மனுக்கு பிறகு கோலி உதித்தெழுந்தார். தற்போது ஜெய்ஸ்வால், பண்ட், கில் இருக்கின்றனர். உள்ளூர் போட்டிகளால் இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!