News February 1, 2025
ஆண்களே, அலர்ட் ஆகுங்க!

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. உலகம் முழுதும் லட்சக்கணக்கான ஆண்களிடம் நடந்த தொடர் ஆய்வில், 1973-ல் இருந்ததைவிட 2011-ல் விந்தணுக்கள் எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளது உறுதியானது. அவற்றின் செயல்திறனும் குறைந்துள்ளதாம். நவீன வாழ்வியல் முறை, தவறான உணவுப் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, நச்சு ரசாயனங்கள், மது உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணங்கள்.
Similar News
News March 20, 2026
விஜய் டெபாசிட்டை இழப்பார்: அர்ஜூன் சம்பத்

அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை பிரிக்கும் வேலையைத் தான் தவெக செய்வதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆனால் தவெகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டு தவெகவை இயக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 20, 2026
முடி உதிர்வு கவலை இனி வேண்டாம்!

முடி உதிர்வை தடுக்க சிம்பிளான சில டிப்ஸ் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ➤வேப்ப எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு முடியின் வேர்களில் மசாஜ் செய்யலாம். ➤1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந்தலையில் தடவலாம். ➤1 முட்டை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் கலந்து முடியில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும்.➤வெந்தயத்தை ஊறவைத்து பேஸ்டாக அரைத்து முடியின் வேர்களில் தடவலாம். Share it
News March 20, 2026
தேர்தல் வாக்குறுதி.. உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது கூட்டணி, வேட்பாளர் செல்வாக்கு & தேர்தலின் கதாநாயகனான வாக்குறுதிகள் தான். தற்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மகளிர் வாக்குகளை கவரும் விதமான அறிவிப்புகளும், இலவசங்களும் நிச்சயம் இருக்கும். வாக்காளராக நீங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான ஒற்றை வாக்குறுதி பற்றி கமெண்ட் பண்ணுங்க


