News April 1, 2025
ஆண்கள் நாசமா போங்க.. சாபம் விட்ட சின்மயி

சின்னத்திரை நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக ஆண்களை சின்மயி கடுமையாக சாடியுள்ளார். வீடியோவை அதிகமாக பகிர்ந்து, பார்த்தது ஆண்கள்தான் அவர் Xல் பதிவிட்டுள்ளார். வீடியோவை பகிர்ந்த ஆண்கள், நடிகையிடம் பாலியல் இச்சைக்காக பேசிய அருவருப்பான மனிதன் பற்றி ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். வீடியோவை பகிர்ந்த அனைவரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க என பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 28, 2025
ஹிட்லர் ஆட்சி நடத்தும் CM ஸ்டாலின் : அன்புமணி

உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாக அன்புமணி சாடியுள்ளார். திமுகவினரிடையே முறைகேடு தலைதூக்குமானால் சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, அமைச்சர்களின் ஊழல் பற்றி ED அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அடித்தட்டு மக்களிடம் வீரத்தை காட்டும் நவீன ஹிட்லரின் ஆட்சி 2026-ல் வீழ்வது உறுதி என X-ல் அவர் கூறியுள்ளார்.
News December 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 563
▶குறள்:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
▶பொருள்: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
News December 28, 2025
அடக்குமுறையின் உச்சத்தில் திமுக அரசு: OPS

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என OPS கூறியுள்ளார். கோரிக்கைளை நிறைவேற்றுவதை தவிர்த்து, போலீஸ் மூலமாக கைது நடவடிக்கை மேற்கொள்வது அடக்குமுறையின் உச்சம் என அவர் சாடியுள்ளார். நீட் தேர்வு, மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வரிசையில் தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்காததற்கும் திமுக அரசு தான் மூலக் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


