News December 12, 2024
ஆண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமையுண்டு

விவாகரத்து ஆனபின், மனைவிக்கு ஜீவனாம்ச உதவி பெற உரிமையுண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், விவாகரத்து சட்டப்படி, நிபந்தனைக்கு உட்பட்டு கணவனுக்கும் ஜீவனாம்ச உரிமை உள்ளது தெரியுமா? உடல் ரீதியாகவோ, நிதி ரீதியாகவோ மனைவியை சார்ந்திருக்கும் நிலையில் உள்ள கணவன், விவாகரத்துக்கு பின் மனைவியிடம் ஜீவனாம்சம் கோர சட்டத்தில் இடமுண்டு என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
Similar News
News September 14, 2025
ஊறுகாய் போடுபவர் என்று விமர்சித்தனர்: நிர்மலா

ஊறுகாய் போடும் தனக்கு GST-யில் என்ன தெரியும் என்று விமர்சித்திருந்தாலும், மக்கள் நலனே தங்களது இலக்கு என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த GST விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அவர், ஒருநாள் PM மோடி தன்னை அழைத்து, GST குறித்து பல விமர்சனங்கள் வருவதால் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். எனவே, 8 மாதங்களாக பல கட்டங்களாக ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
News September 14, 2025
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.. ரூல்ஸ் மாறுகிறது

ஐகோர்ட் உத்தரவின்படி நவ.30-ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நீலகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அமலில் உள்ள இத்திட்டத்திற்கு மதுப்பிரியர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிகிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
News September 14, 2025
இதெல்லாம் கொள்கையற்ற கூட்டத்திற்கு தெரியாது: CM

திமுகவின் நல்லாட்சியால் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர், திமுக அரசின் சாதனைகள் என்பது கொள்கையற்ற கூட்டத்திற்கு தெரியாது என தெரிவித்தார். மேலும், நீட் விலக்கை கொண்டுவர முடியவில்லை என்ற குற்றச்சாட்டை தாங்கள் மறுக்கவில்லை என்ற அவர், அதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.