News October 9, 2025
மாமனிதர் ரத்தன் டாடாவின் நினைவு நாள்

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. டாடா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றியவர். அதைவிட, அவரது எளிமை, கொடை உணர்வு, சிறந்த தலைவருக்கான பண்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. புகழ்ச்சியை எப்போதும் விரும்பாத ரத்தன் டாடா, அதி தீவிர உழைப்பாளி. தனது நிறுவன ஊழியர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவர். அவரிடம் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News October 9, 2025
Gold Loan வாங்க போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க

அடித்தட்டு மக்களுக்கு மிகவும் எளிதாய் கிடைக்கும் கடன், நகைக்கடன் தான். இதனை வாங்கும்போது வங்கிகள், நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது முக்கியம். குறைந்த வட்டிக்கு பொதுத்துறை நிறுவனங்களே சிறந்தவை. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி போடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 9, 2025
மேம்பாலத்திற்கு சாதிப் பெயர் ஏன்? சீமான்

கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது என்று பேசிய திமுக, ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளார்.
News October 9, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு புதிய தகவல்

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க TN திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி பரவியது. அதில், புதிய அப்டேட்டாக யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரிசி, சர்க்கரை ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ₹5,000 கிடைக்கும் என்றும், அடையாளத்திற்காக கார்டு வைத்திருப்போருக்கு பணம் கிடைக்காது எனவும் சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி இதற்கான அறிவிப்பு வெளியாகுமாம். SHARE IT.