News June 26, 2024

சந்தானப் பாக்கியம் அருளும் மேலவாசல் சுப்ரமணியர்

image

அறுபடை வீடுகளுக்கும் சென்று ஆறுமுகனை வணங்கினால் கிடைக்கும் புண்ணியப் பலனை மேலவாசல் சுப்ரமணியர் ஒருவனை தரிசித்தாலே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் பாளையங்கோட்டையில் உள்ளது. ஆனி கார்த்திகை நாளில் இக்கோயிலுக்கு சென்று, பச்சைச் சாற்றி செய்து, நெய் தீபமேற்றி, தினை மாவுருண்டை படைத்து வழிபட்டால் சந்தானப் பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

Similar News

News March 2, 2026

பெரிதாகும் போர்.. ஈரானுடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா

image

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

News March 2, 2026

ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக அரசு: EPS

image

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறும் நிலையில், அதை EPS மறுத்துள்ளார். மோடி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு பிரசாரத்தை திமுக பரப்புவதாக சாடிய EPS, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும் விமர்சித்தார்.

News March 2, 2026

டெய்லி டிபனாக தோசை சாப்பிடலாமா..?

image

இந்த கேள்வி உங்களுக்கு எழுந்தால், நல்லதுதான் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், தோசையுடன் தானியங்கள், கறிவேப்பிலை, வெந்தயம், கீரை ஆகியவற்றை சேர்க்கவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், சட்னியில் புரோட்டின் நிறைந்த பாதாம், பிஸ்தாவையும் சேர்க்கலாம் என்கின்றனர். இது எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்த வழி எனவும் சுட்டிக்காட்டுகிறார்கள். நாளை உலக தோசை தினம். உங்களுக்கு பிடித்த தோசை வகை எது?

error: Content is protected !!