News January 9, 2025
2024ல் ‘மெய்யழகன்’ தான் டாப்!

Letterboxd நிறுவனம், 2024-ல் தங்களது தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், Action/ Adventure பிரிவில் ‘மகாராஜா’ 7-ம் இடம் பிடித்துள்ளது. ‘லப்பர் பந்து’ romance பிரிவில் 6, sports பிரிவில் 3-வது இடம் பிடித்தது. Highest Rated Overall பட்டியலில் 13-வது இடம் பிடித்த ‘மெய்யழகன்’, drama பிரிவில் 6, Asian film பிரிவில் 4-வது இடத்திலும் உள்ளது. உங்களுக்கு பிடித்த படம் எது?
Similar News
News January 17, 2026
₹565 கட்டினால் போதும் ₹10 லட்சத்துக்கான காப்பீடு!

போஸ்ட் ஆபீசின் காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ₹565 பிரீமியமாக செலுத்தினால், ₹10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்த காப்பீடு திட்டத்தில் சேர மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இயற்கை (அ) விபத்தில் மரணமடைந்தால் நாமினி பணத்தை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் Post Office-ஐ அணுகுங்கள். அனைவரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News January 17, 2026
மகளிருக்கு ₹2,000: அதிமுகவின் அறிவிப்புக்கு சீமான் எதிர்ப்பு!

<<18879658>>அதிமுகவின் முதற்கட்டத் தேர்தல்<<>> வாக்குறுதிகளுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகளிருக்கு இலவசம் எனக் கூறிவிட்டு அரசு பஸ்கள் தரமில்லாததோடு, அவர்களை ஓசி எனக் கூறி அவமானப்படுத்தும் நிலை இருக்கும்போது ஆண்களுக்கும் இலவசம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களுக்கு ₹2,000 என்ற அறிவிப்பும் கஜானாவை சுரண்டும் செயல் என ஆவேசமாக சாடியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 17, 2026
NDA கூட்டணிக்கு அழைக்கவில்லை: OPS

ஜன.23-ல் PM மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் <<18878783>>NDA <<>>கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்திற்கு, தனக்கு அழைப்பு வரவில்லை என OPS தெரிவித்துள்ளார். ஜன.14-ல் OPS-ஐ சந்தித்த TTV, கூட்டணி தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதனால், இருவரும் NDA கூட்டணிக்கு செல்வார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், OPS இவ்வாறு கூறியுள்ளது அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


