News April 28, 2025
மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.
Similar News
News November 6, 2025
ED-யின் ஹிட் லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள்?

அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களில் ED நடத்திய ரெய்டில் அரசு துறையில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அரசியல் தலைவர்கள் அட்டாக் மோடில் இறங்க அறிவாலயம் அதிர்ந்துபோனது. இந்நிலையில், ED-யின் ஹிட் லிஸ்டில் மேலும் பல அமைச்சர்கள் இருக்கின்றனராம். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, சக்கரபாணி, மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் ED-யின் ரேடாரில் இருப்பதாக கூறப்படுகிறது.
News November 6, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

கடந்த 2 நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000-க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்ததன் எதிரொலியாக, நம்மூரிலும் உயர்ந்துள்ளது.
News November 6, 2025
MLA மீது தாக்குதலா?

பிஹாரின் பரசட்டி பகுதியில் மர்ம நபர்கள் தனது கார் மீது கல்லெறிந்து தாக்கியதாக MLA-வும், NDA வேட்பாளருமான ஜோதி மாஞ்சி குற்றம்சாட்டினார். இதனால் காயமடைந்ததாக அவர் போலீஸில் புகாரளிக்க, விசாரணையும் தொடங்கியது. ஆனால், தாக்குதல் நடந்ததற்கான தடையமே இல்லை என போலீஸ் கூறியுள்ளனர். பாஜக இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


