News August 24, 2024
அடுத்த மாதம் மேகா ஆகாஷ் திருமணம்?

நடிகை மேகா ஆகாஷுக்கும் அவரது காதலர் சாய் விஷ்ணுவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் (செப்) 15ஆம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. சாய் விஷ்ணு காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
Similar News
News March 9, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(9.03.2026) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், அம்மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இன்றைய தினம் இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
News March 9, 2026
பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.
News March 9, 2026
சீக்கிரம் தேர்தலை நடத்துங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன்

த்ரிஷா சர்ச்சைக்கு பின்னும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை என கூறப்படும் நிலையில், சீக்கிரம் தேர்தலை வச்சி முடிங்க, இந்த Opinion Poll தொல்லை தாங்க முடியலே என ECI-க்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Opinion Poll-ஐ Twitter-ல போட்டு நம்மள confuse பண்றாங்க; ஜனங்க நிம்மதியா, அவங்க இஷ்டப்படி ஓட்டு போட விடுங்கப்பா எனவும் கூறியுள்ளார்.


