News September 12, 2024
அனைத்து மாவட்டங்களிலும் வருகிறது ‘மெகா ஸ்டோர்’

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும், கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக ‘மெகா ஸ்டோரை’ திறக்க திட்டமிட்டுள்ளது. அதில், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள், விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
செப்டம்பர் 16: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம். *1921 – சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்நாட்டில் தமிழை சிறப்பித்தவருமான லி குவான் யூ பிறந்தநாள். *1923 – எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பிறந்தநாள். *1961 – விண்வெளி ஆய்வு நிறுவனத்தை பாகிஸ்தான் நிறுவியது. *1976 – தென்னிந்திய திரைப்பட நடிகை மீனா பிறந்தநாள். *2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
News September 16, 2025
அம்மா ஆகப்போகும் கத்ரினா கைஃப்!

பாலிவுட் ஸ்டார் தம்பதி கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் விரைவில் தங்கள் குழந்தையை வரவேற்க உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கத்ரினாவிற்கு, வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்க உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் தெரிவித்துள்ளன. கத்ரினா கடைசியாக, விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நடித்திருந்தார். விக்கி – கத்ரினா ஜோடி கடந்த 2021-ல் திருமணம் செய்தனர்.
News September 16, 2025
இந்து மதத்தில் சமத்துவம் இருக்கிறதா? சித்தராமையா

இந்து மதத்தில் சமத்துவம் இருந்தால் ஏன் மதம் மாறப்போகிறார்கள் என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். சமத்துவம் இருந்திருந்தால், இந்து மதத்தில் தீண்டாமை ஏன் வந்தது எனவும், எந்த மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், மதம் மாறுவது மக்களின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பில் பிற மதத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவே அவர் இவ்வாறு பேசுவதாக அம்மாநில பாஜக சாடியுள்ளது.