News August 28, 2025

ஒரு லட்சம் சேலைகளால் உருவான மெகா கணபதி

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் சேலைகளை கொண்டு விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். ஒரு லட்சம் சேலைகளை மடித்து அடுக்கி 111 அடி உயர சிலை வடிவமைத்துள்ளனர். இந்த விநாயகரின் பெயர் ‘சுந்தர வஸ்தர மகா கணபதி’. சேலைகளை சூரத், தமிழகம், மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றுள்ளனர். வழக்கமாக விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைப்பார்கள். இங்கு சேலைகளை பக்தர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர்.

Similar News

News August 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 441 ▶குறள்: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். ▶ பொருள்: அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

News August 28, 2025

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை? ஃபிஃபா எச்சரிக்கை

image

அக்டோபர் 30-ம் தேதிக்குள் புதிய விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) தடை விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசு அதில் தலையிட நினைப்பதே பிரச்னைக்கு காரணம். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-ல் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், AIFF-க்கு தடை விதிக்கப்பட்டால் அது பாதிப்பாக அமையும்.

News August 28, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 28, ஆவணி 12 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!