News August 8, 2024
திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி: கிருஷ்ணசாமி

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சமூக அநீதி என்று விமர்சித்த அவர், இதன் காரணமாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 1.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
ஒருபுறம் உயர்வு.. மறுபுறம் சரிவு!

GST வரிவிதிப்பு சீர்திருத்தம், ரஷ்யா, உக்ரைன் அதிபர்களுடன் USA அதிபர் பேச்சு வார்த்தை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,000 புள்ளிகளை தொட்டுள்ளது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,083 புள்ளிகளில் உள்ளது. ஆனாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ₹87.25 ஆக உள்ளது.
News August 22, 2025
பாஜக முதல்வர்களையே பதவி நீக்கலாம்: பெ.சண்முகம்

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்த மசோதா மூலம் PM மோடி, அமித்ஷா ஆகியோருக்கு பிடிக்காத BJP முதல்வர்களைக் கூட பதவியில் இருந்து நீக்கும் வாய்ப்புள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தாங்கள் நினைப்பதை சட்டமாக உருவாக்குவதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்றார்.
News August 22, 2025
மதுரை மாநாட்டில் விஜய் தவறவிட்டது என்ன?

திமுக, பாஜகவை விமர்சித்த விஜய், பல பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசாமல் விட்டது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நிகழும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக அவர் பேசாமல் விட்டது அரசியல் கணக்கு என ஒருசாரார் கூறினாலும், அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனர். இளைஞர் அஜித் மரணம், நெல்லை கவின் படுகொலை குறித்து அவர் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?