News October 7, 2025

சற்றுநேரத்தில் இபிஎஸ் உடன் சந்திப்பு.. கூட்டணி பேச்சு

image

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் ஆகியோர் இன்று காலை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ்ஸை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது, கூட்டணியை வலுப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, கரூர் துயர விவகாரத்தில் விஜய் முடங்கி இருப்பதால், அவருடன் கூட்டணிக்கு செல்ல காத்திருந்த சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News October 7, 2025

அரசனாகும் சிலம்பரசன்

image

சிம்புவுடன் வெற்றிமாறன் முதன்முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News October 7, 2025

லாரி இறக்குமதிக்கு 25% வரி விதித்தார் டிரம்ப்

image

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அதிகளவு லாரிகளை ஏற்றுமதி செய்யும் கனடா, மெக்சிகோ இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் என கூறப்படுகிறது. இந்திய வாகன ஏற்றுமதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.

News October 7, 2025

ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

பிஹார் தேர்தல் முடித்த பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ராஜ்யசபா தலைவராக அமர உள்ள துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சுமூக உறவை ஏற்படுத்த விரும்புகிறார். அதன்படி இன்று மாலை அவரது அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

error: Content is protected !!