News April 16, 2025
முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனையடுத்து, வேந்தராக முதல்வர் இன்று கூட்டத்தை நடத்தினார்.
Similar News
News November 16, 2025
விஜய்க்கு ஹிட் அடித்த 10 ரீ-மேக் படங்கள்

விஜய் நிறைய ரீ-மேக் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த பல ரீ-மேக் படங்கள், பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. அவை, பெரும்பாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ரீ-மேக்காக இருந்துள்ளன. அந்த படங்கள் எது என்று தெரியுமா? டாப் 10 ஹிட் படங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?
News November 16, 2025
தோல்விக்கு வீரர்களை சாடிய கவுதம் கம்பீர்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு திறனுடன் கூடிய மனவலிமை தேவை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் இலக்கானது எளிதில் துரத்திப் பிடிக்க கூடியதே என்று அவர் கூறியுள்ளார். சுழலுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடுவதற்கு உத்தியும், நிதானமும் தேவை எனவும், சரியாக விளையாட தவறினால் தோல்வியே ஏற்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் பண்றீங்களா?

ஐஸ் க்யூப்களை வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துக்காது, டாக்டரின் ஒப்புதலுடன் கொடுக்கலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.


