News April 9, 2024

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அருமருந்து

image

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாக பூண்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் பக்க விளைவுகளைக் காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு உடலுக்கு அதிகம் அளிக்கிறது.

Similar News

News July 7, 2025

தோனியின் முதல் காதலியின் பெயர் இதுதான்!

image

2018-ல் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் மேஜிக் மேன் ஒருவர், தோனியின் முதல் காதலியின் பெயரை யூகிக்க முயற்சித்தார். இறுதியில், ‘அவள் பெயர் ஸ்வேதா’ எனக் கூறிய MSD, ஆனால் என் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள் என்று அவர் கூற அங்கு சிரிப்பலை எழுந்தது. கூல் கேப்டனாக அறியப்படும் தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே, அவரது விளையாட்டு & தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் நினைவுகூருகின்றனர்.

News July 7, 2025

மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் ஸ்டிரைக்!

image

மத்திய அரசை கண்டித்து நாளை(ஜூலை 9) மறுநாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. 4 புதிய தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம், பஸ், ஆட்டோக்கள் ஓடாது என தொமுச எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 7, 2025

இன்றே கடைசி.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

இளங்கலை நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதற்கான விண்ணப்பம் இன்று (ஜூலை 7) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து உடனே அப்ளை செய்யுங்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும்.

error: Content is protected !!