News April 14, 2024
80% தள்ளுபடி விலையில் மருந்துகள்

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Similar News
News January 17, 2026
FLASH: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $23(இந்திய மதிப்பில் ₹2,087) குறைந்து $4,596-க்கு விற்பனையாகிறது. நேற்று $25 குறைந்திருந்த நிலையில், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்தது. இதனால், இன்றும்(ஜன.17) காலை 9 மணிக்கு இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
News January 17, 2026
காங்., நிர்வாகிகளுடன் டெல்லி தலைமை ஆலோசனை

ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., கட்சியினர், தவெக பக்கம் செல்ல விரும்புவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி தலைமை இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் ராகுல், கார்கே பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 17, 2026
விதைகள் மசோதாவால் பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர்

புதிய விதைகள் மசோதா, விவசாயிகளுக்கும், பாரம்பரிய விதை ரகங்களுக்கும் பொருந்தாது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விளக்கம் அளித்துள்ளார். விவசாயிகள் வழக்கம் போல் சொந்த விதைகளை விதைக்கலாம் எனவும், ஒருவருக்கொருவர் விதைகளை பரிமாரிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். விதைகள் உற்பத்தியை பதிவு செய்வது கட்டாயம் என கூறப்பட்டதால், பாரம்பரிய விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்தது.


