News August 17, 2024
தற்கொலைக்கு தள்ளப்படும் மருத்துவ மாணவர்கள்..?

இந்தியாவில் மருத்துவ மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக UG மற்றும் PG மருத்துவ மாணவர்களிடையே BBC நடத்திய சர்வேயில், கடந்த ஓராண்டில் 16.2% பேர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு படிக்கும் சூழல், நிதிச்சுமை, ராகிங், தனிமை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. *தற்கொலை தீர்வல்ல. உதவிக்கு Call 104
Similar News
News August 15, 2025
பாக்., இந்தியாவிடம் மோசமாக தோற்கும்: EX பாக் வீரர்

லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ஆகஸ்ட் 15: வரலாற்றில் இன்று

* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.
News August 15, 2025
CM ஸ்டாலின் அறிவிப்புகளுக்கு வரவேற்பு: திருமாவளவன்

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.