News October 25, 2024
நல்லூரில் மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 14, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று (அக்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 13, 2025
கடலூர்: பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(42). இவர் செட்டிபாளையம் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிப்புரிந்து வந்தார். இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், குடும்பப் பிரச்சினையால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News October 13, 2025
கடலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<