News June 13, 2024
ஜூலை 6 முதல் மருத்துவக் கலந்தாய்வு

2024-25 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே கடந்த 4ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, கலந்தாய்வு எப்போது என்பது குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஜூலை 6 முதல் மருத்துவக் கலந்தாய்வை தொடங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Similar News
News September 6, 2025
விஜய் களத்திற்கு வந்தபின் இது நடக்கும்: அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் போன்றவர்கள் களத்திற்கு வந்த பிறகு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அண்ணாமலை அண்மையில் கூறி இருந்தார். விஜய் குறித்த அவரது கருத்தை எப்படி பார்க்குறீங்க?
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 6, 2025
₹1.45 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த டாடா!

GST 2.0 எதிரொலியாக கார்களின் விலையை ₹65,000 முதல் ₹1.45 லட்சம் வரை குறைக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய கார் மாடல்களான Tiago – ₹75,000, Tigor – ₹80,000, Altroz – ₹1.10 லட்சம், CurVV – ₹65,000 என விலை குறைக்கப்பட உள்ளது. அதேபோல், SUV மாடல்களான Harrier – ₹1.4 லட்சம், Safari – ₹1.45 லட்சம் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.