News August 21, 2024
மெடிக்கல் காலேஜ் பாதுகாப்பு: பறந்தது உத்தரவு

<<13843752>>கொல்கத்தா <<>>சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மெடிக்கல் காலேஜில், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க மருத்துவ கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார். அதில் “36 கல்லூரிகள், மருத்துவ மாணவிகளின் விடுதிகளில் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். கல்லூரிகளில் 100-160 CCTV வரை பொருத்த வேண்டும். மெடிக்கல் காலேஜ் போலீசாரின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
பா.ரஞ்சித்தின் 13 ஆண்டுகால பயணம்

இயக்குநர், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2012 ஆக., 15-ம் தேதி ‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார். அவரது படங்களில் சாதாரண மக்களின் காதலையும், கஷ்டங்களையும் இயல்பான திரைமொழியில் வெளிப்படுத்தியவர். ‘அட்டகத்தி’,
‘மெட்ராஸ்’, ‘சார்பட்டா பரம்பரை’ என ட்ரெண்ட் செட்டிங் படங்களை கொடுத்தவர். அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
News August 16, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வர உள்ளது. ஆகவே, முந்தைய வாரத்தின் சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அந்த வகையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதால், சொந்த ஊர் செல்வோர் பயன்படுத்தி கொள்ளவும். அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய், 19-ம் தேதிக்கு புதன், 20-ம் தேதிக்கு வியாழன் காலை 8 மணிக்கு தொடங்கும்.
News August 16, 2025
₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு எதிராக ஹண்டர் பைடன் அவதூறு பரப்பியதாக கூறி ₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் டிரம்ப்பிற்கு மெலனியாவை அறிமுகப்படுத்தியதாக ஹண்டர் பேசியிருந்தார்.