News May 27, 2024

ரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கான அர்த்தம் (2/2)

image

026-050 வரை முதல் மற்றும் 2ஆம் வகுப்பு ஏசி பெட்டி, 051 -100 வரை 2ஆம் வகுப்பு ஏசி, 101-150 3ஆம் வகுப்பு ஏசி, 151-200 ஏசி இருக்கை வசதி, 201-400 2ஆம் வகுப்பு தூங்கும்வசதி, 401-600 2ஆம் வகுப்பு முன்பதிவில்லா பொதுப் பெட்டி, 601-700 2ஆம் வகுப்பு இருக்கை, 701-800 லக்கேஜ் என அர்த்தம். ரயில் பெட்டிகளில் 800க்கும் மேல் எண்கள் இருந்தால், அவை உணவகம், ஜெனரேட்டர், அஞ்சலுக்கானது எனப் பொருள்படும்.

Similar News

News November 25, 2025

இயக்குநராகும் ஆசையில் கீர்த்தி ஷெட்டி

image

வா வாத்தியார், ஜீனி, LIK என அடுத்தடுத்து கீர்த்தி ஷெட்டியின் படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், தனக்கு இயக்குநர் ஆகும் ஆசை அதிகரித்துக் கொண்டே வருவதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால், தான் சினிமாவில் நுழைந்தபோது ஒரு படம் எப்படி தயாராகிறது என்றே தெரியாது எனவும் கூறினார். டைரக்‌ஷன் சவாலான வேலை என்ற அவர், இந்த சவாலை தனது படங்களின் இயக்குநர்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றார்.

News November 25, 2025

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் Syllabus மாறுகிறது

image

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 2026 – 2027 கல்வியாண்டு முதல், மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் படிப்படியாக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றார்போல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 25, 2025

விளையாட்டில் வீறுநடைபோடும் இந்திய சிங்கப்பெண்கள்..

image

நவம்பர் மாதத்தில், இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று வருவது, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவ.2-ல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தட்டியது. தொடர்ந்து, நவ.23-ல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி கெத்தாக தனதாக்கியது. அதற்கு அடுத்த நாளே (நவ.24) கபடி மகளிர் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

error: Content is protected !!