News August 7, 2025

கூட்டணி மாறும் மதிமுக: மல்லை சத்யா

image

துரை வைகோ மத்திய அமைச்சராக ஆசைப்படுவதால் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, விரைவில் கூட்டணி மாறும்; அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரை எடுத்து வருவதாகவும் உறுதிப்பட தெரிவித்தார். மதிமுக கூட்டணி மாறப்போவதாக வெளியான செய்தியை வைகோ மறுத்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மோடியை துரை வைகோ 2 முறை (திருச்சி, டெல்லி) சந்தித்துள்ளார்.

Similar News

News April 11, 2026

ரிலீசுக்கு முன்பே லீக்கான திரைப்படங்கள்

image

விஜய்யின் ஜன நாயகன் படத்தை போல ரிலீசுக்கு முன்பே பல படங்கள் இணையத்தில் லீக்காகி இருக்கின்றன. சரத்குமாரின் ‘ஜக்குபாய்’ படம் திருட்டு VCD-களில் விற்கப்பட்டதால் வசூல் பாதிக்கப்பட்டது. பவன் கல்யாணின் Atharintinki Daredi, நிவின் பாலியின் ‘பிரேமம்’ படங்கள் இணையத்தில் கசிந்தாலும் ரசிகர்களால் வெற்றிப் படங்கள் ஆக்கப்பட்டன. எனவே, ஜனநாயகனும் அம்மாதிரியான வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

News April 11, 2026

விஜய் கடைசி நேரத்தில் மாற்றினார்.. தவெகவினர் ஷாக்

image

தேர்தல் பரப்புரையை விஜய் அடுத்தடுத்து ரத்து செய்வது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்.6-ல் தி.நகர், வில்லிவாக்கம் பரப்புரை ரத்தானது போல இன்றைய கடலூர் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை குமரியில் நடைபெற இருந்த பரப்புரையையும் விஜய் ரத்து செய்துள்ளார். அதேபோல், ஏப்.13-ல் கும்மிடிப்பூண்டியில் மேற்கொள்ளவிருந்த பரப்புரையும் ஏப்.19-க்கு மாற்றப்பட்டுள்ளது.

News April 11, 2026

10, +2 தேர்வு முடிவுகள் தேதி.. புதிய செய்தி வந்தது

image

10, +2 பொதுத்தேர்வு வெளியாகும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ல் 12-ம் வகுப்பு, மே 20-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!