News April 20, 2025
துரை வைகோ ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை

துரை வைகோவின் ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை. சென்னையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோ மேடையில் அமர்ந்துள்ளார். அதோடு, இக்கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர் மோடி இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தத்திற்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் துரை வைகோவை முதன்மைச் செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 25, 2025
தவெகவில் இணைகிறாரா அதிமுக EX எம்பி?

அதிமுக EX MP கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், EPS-ஐ தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் MGR-ன் ஆட்சியில் MLA-வாக(காங்கேயம் தொகுதி) இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க தவெக தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
News November 25, 2025
14 வகை கேன்சரை அழிக்கும் ஒரே தடுப்பூசி!

ரஷ்யா உருவாக்கியுள்ள கேன்சர் தடுப்பூசியை முதல் நாடாக வியட்நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. Pembroria என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, 14 வகையான கேன்சரை அழிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலையும் குறைவு என்பதால், பலர் இதன்மூலம் பயனடையலாம். இந்தியாவில் இந்த மருந்து தற்போது டெஸ்டிங்கில் உள்ளதால், கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


