News March 18, 2024

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

Similar News

News January 17, 2026

திருச்சி: தரிசிக்க வேண்டிய அம்மன் கோயில்கள்!

image

▶️சமயபுரம் மாரியம்மன் கோயில்
▶️தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்
▶️மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில்
▶️உறையூர் வெக்காளியம்மன் கோயில்
▶️பொன்மலை பொன்னேஸ்வரி அம்மன் கோயில்
▶️குழுமாயி அம்மன் கோயில்
▶️தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில்
▶️வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில்
உங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 17, 2026

திருச்சி: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள்<> இங்கு க்ளிக் செய்து <<>>சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும். பருவ கால விமானமான இவ்விமானம் மார்ச் 31ஆம் தேதி முதல், அக்டோபர் 24ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!