News August 19, 2024

மத்திய அரசுடனான MCI பேச்சுவார்த்தை தோல்வி

image

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் தொடரும் என, அறிவித்துள்ள MCI, உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளது. பெண் மருத்துவர் கொலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடந்து வருகிறது.

Similar News

News March 15, 2026

இரவில் நிம்மதியாக தூங்க உதவும் 10-3-2-1 விதி!

image

இரவில் நிம்மதியாக தூங்க 10- 3- 2- 1 விதியை ட்ரை பண்ணுங்க ➤தூங்குவதற்கு 10 மணி நேரத்துக்கு முன் காபி, டீ போன்ற காஃபின் பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் ➤தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் உணவு சாப்பிட்டு முடியுங்கள் ➤மன நிம்மதியாக தூங்க, வேலைகள் அனைத்தையும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே முடியுங்கள். ➤தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டை தவிருங்கள். SHARE.

News March 15, 2026

மனசாட்சியை அடகுவைத்த EPS: CM ஸ்டாலின்

image

நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் நிலவுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி EPS எதுவும் பேசவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், அதிமுக என்ற கட்சியுடன் சேர்த்து, தனது மனசாட்சியையும் பாஜகவிடம் EPS அடகு வைத்துவிட்டாரா என்றும் CM ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

News March 15, 2026

தேர்தல் நேரத்தில் விஜய்க்கு சிக்கல்

image

ஏப்.23-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெகவின் ஒற்றை முகமாக திகழும் அவர், இறுதிக்கட்ட பரப்புரையை தவறவிடும் சூழல் எழுந்துள்ளது. சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஏப்.20-ல் ஆஜராக செங்கல்பட்டு கோர்ட் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது. இது தவெகவின் கடைசிக்கட்ட தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு விலக்கு கிடைக்குமா?

error: Content is protected !!