News August 2, 2024

மெக்கல்லமே சிறந்த பயிற்சியாளர்: மோர்கன்

image

இங்கி., ODI பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் என முன்னாள் வீரர் இயோன் மோர்கன் கூறியுள்ளார். உலகின் சிறந்த பயிற்சியாளராக இருக்கும் மெக்கல்லத்தை விட இங்கிலாந்து அணியை யாரும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்று பாராட்டிய அவர், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை சிறந்த அணியாக மாற்றியுள்ளதை மறந்து விடக்கூடாது என்றார். மெக்கல்லம் தற்போது இங்கி., டெஸ்ட் அணி பயிற்சியாளராக உள்ளார்.

Similar News

News October 25, 2025

மத்திய அரசில் 258 காலியிடங்கள்.. ₹44,900 சம்பளம்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News October 25, 2025

மகளிருக்கு மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேரும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்ச்சி பெற்று கார்டியோ சோனோகிராபி டெக்னிசியன், இசிஜி/ ட்ரெட் மில் டெக்னிசியன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்பவர்களுக்கு புதுமைப்பெண், வெற்றி நிச்சயம் ஆகிய திட்டங்களின் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் நவ.14 முதல் விண்ணப்பிக்கலாம்.

News October 25, 2025

‘கிங்’ கோலி அரைசதம்!

image

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தற்போது ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்திய அணி 27.2 ஓவர்களில் 168/1 ரன்களை குவித்துள்ளது. Hitman ரோஹித்தும் அரைசதம் அடித்து, 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். ODI-யில் இது விராட் கோலியின் 75-வது அரைசதமாகும்.

error: Content is protected !!