News August 5, 2024
சண்டை பயிற்சியாளர்களுக்காக குரல் கொடுத்த எம்பி

சினிமா சண்டை பயிற்சியாளர்களின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துமாறு, நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் சர்வதேச தரத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும், சண்டை பயிற்சியாளர்கள் பாதுகாப்பு வாரியத்தை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
பெண்களை காவு வாங்கும் இருண்ட மாடல் ஆட்சி: நயினார்

TN-ல் 2, 7 மற்றும் 17 வயது என பெண் பிள்ளைகள் தினந்தோறும் காமக் கொடூரர்களின் பிடியில் சிக்கி தவிப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இருண்ட மாடல் ஆட்சியில் <<19356260>>தூத்துக்குடியில் மாணவி<<>> வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களின் கண்ணீரால் திமுக அரசு அழியும் எனவும் சாடியுள்ளார்.
News March 12, 2026
இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் சப்ளை.. IOCL முக்கிய அறிவிப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என தகவல் பரவிவரும் நிலையில், மக்கள் அவசர அவசரமாக கேஸுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து IOCL முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைந்து கியாஸ் புக்கிங் செய்யத் தேவையில்லை எனவும், அனைவரின் நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.


