News July 6, 2024
அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார் மாயாவதி

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது வீட்டருகே 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை நடந்த 5 மணி நேரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.
Similar News
News September 23, 2025
குடலை குளுகுளுப்பாக வைத்திருக்க இது போதும்!

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பலருக்கும் ஆசை, ஆனால் துரித உணவுகளால் அதை பாழாக்கி வருகின்றனர். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது கட்டாயம். அந்த உணவு எது? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்…
News September 23, 2025
இருமொழிக் கொள்ளையில் சாதித்த தமிழகம்: அன்பில்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு, அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம் என அவர் விளக்கியுள்ளார். மேலும் இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் எனவும் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
இந்தியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் H3N2 வைரஸ் பரவலால் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உடல் வலி, சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். H3N2 வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், போதுமான நேரம் தூங்குங்கள், வெளியே செல்லாதீர்கள். மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள், முதியவர்கள் டாக்டரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிடவும்.