News May 5, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மயங்க் யாதவ் விலகல்

மயங்க் யாதவ் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். “மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது” என்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ பங்கேற்ற முதலிரண்டு போட்டியிலும் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Similar News
News November 17, 2025
பொங்கல் விடுமுறை… வந்தது HAPPY NEWS

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு போக ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என சோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. டிச.15 முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொங்கலுக்கு ஊருக்குச் செல்பவர்கள் பணியிடங்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

85,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 388 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், 84,950.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல 103.40 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26,013.45 புள்ளிகளில் நிறைவு செய்தது. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, மீடியா துறைகள் ஏற்றம் கண்டன. முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.